Monday, November 26, 2012

Br.Nixon's Priestly Ordination Invitation


அனைவரும் இத்திருநிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் 
                                                                                                                     இப்படிக்கு 
♥♥♥ஜெரி♥♥♥

Friday, November 23, 2012

......♥♥♥ எம் மண்ணின் மைந்தரே ♥♥♥.......



எங்கள் மண்ணில் பிறந்தவரே



எல்லார் மனதிலும் நிறைந்தவரே

என்றும் எம்மை வழிநடத்தும்
எங்கள் தேவசகாயம் பிள்ளையே !
நாயர் குடும்ப நாயகனாய்
நட்டாலம் மண்ணில் பிறந்து ..
நலமுடனே ஆயக்கலைகள் பயின்று
அரசு பணிதனை அனுசரித்து - அவன்
படைதனை வழி நடத்தி - அதிலே
மகிழ்வு கண்டவரே !
டச்சு தளபதி டிலனாயின்
வார்த்தைகளால் வழி மாறி
கிறிஸ்தவ மறையை கொண்டவரே !
உண்மை மறை உணர்ந்து
உம்மை அதில் இணைத்து
உலகாளும் இறையவனின்
உறவினிலே நிலைத்து
கொடுமைகளையும், தனிமையையும்
சகிப்போடு சுமந்து ......
சரித்திரம் படைத்தவனே !
அற்புதங்கள் வழியாக - உம்
அருள் கொடைதனை
அடையாளப்படுத்தி - எம்மில்
அமைதி தருபவரே !
பாறை பிளந்து தண்ணீர் கண்டீர்
பட்ட மரமும் திளிர்க கண்டீர்
பாறைகள் உருண்டு
பரமனின் ஆலய மணியாய்
பறை முழங்க கண்டீர் - இந்த
பாதையின் வழியில் - உலகின்
பாதையாம் இறைவனை கண்டீர்!
இறை மறை கொண்டதால்
இவ்வளவும் கண்டு - இன்று
இம்மண்ணின் காவலனாய் !
ஆசிர்வதிக்கப்பட்டவரே - எங்கள்
அன்பராம் தேவசகாயம் பிள்ளையே !
புனித நிலை நீர் பெற்று
புதுமைகளால் நிலை பெற்று - எம்மை
உம் நிழல்தனில் தாங்கிட
உம் பாதம் பணிந்து - இறைவனை
உணர்வதில் இருப்பதே மகிமை!

அன்புடன்
♥♥♥♥♥♥
ச.கி.ஜோஸ் சேம்..

தேவசகாயம்பிள்ளை முக்திபேறு பெற்ற மறைசாட்சி அறிக்கை விழா



நாள்:02-12-2012,                                   இடம்:கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகம்
நேரம்:பிற்பகல்3.30 மணி                              இராமன்புதூர்,நாகர்கோயில்-4

அன்புடையீர்!
     வணக்கம்.தமிழ் மண்ணின் தென்கோடியிலுள்ள குமரியில் நட்டாலம் ஊரில் 1712-ல் நாயர் குலத்தில் பிறந்த நீலகண்டன் போர் வீரர், கோயில் பணியாளர், அரச கருவூல அலுவலர் என பலப்பொறுப்புகளுடன் சிறப்பு பெற்றிருந்தார். அவருக்கு மனைவியாய் வாய்த்தவர் பார்கவியம்மாள்.
     1741-ல் டச்சுப்படையை குளச்சல் போரில் வென்ற மன்னர் மார்தாண்ட வர்மாவால் சிறைபிடிக்கப்பட்ட டச்சுத்தளபதி எஸ்தாக்கியூஸ் பெனடிக்ட் டிலனாய், பின்னாளில் தளபதியாக்கப்பட்டார். நீலகண்ட பிள்ளைக்கு நண்பராக மாறிய டிலனாய் அவருக்கு யோபுவின் வாழ்க்கையையும், யேசுவைப்பற்றியும் எடுத்துரைத்தார். இப்போதனைகளால் ஈர்க்கப்பட்ட நீலகண்ட பிள்ளை கிறிஸ்தவ மறையில் இணைய விரும்பி 1745 மே 14-ல் வடக்கன்குளம் கோயிலில் அருட்தந்தை புத்தேரியிடம் திருமுழுக்குப்பெற்று தேவசகாயம்பிள்ளை (லாசர்) எனப் பெயர் பெற்றார்.
     இயேசுவை ஏற்றுக்கொண்ட தேவசகாயம்பிள்ளையின் வாழ்வில் மாற்றம் தெரிந்தது.சாதிய வேலிகளைத் தாண்டி ஒதுக்கப்பட்ட மக்களோடு உறவு பாராட்டினார். அங்கிருந்த சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்த, மன்னரிடம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோள்மூட்டி மன்னனை தேவசகாயம்பிள்ளைக்கு எதிராகத் திருப்பினர். இதன் விளைவாக 1749 பிப்ரவரி 23-ல் தேவசகாயம்பிள்ளை கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு இரையானார். கழுதையின் மீது ஏற்றி, எருக்கன்மாலை அணிவித்து ஊர்கள் அணிவித்து ஊர்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டார். பசியோடும் தாகத்தோடும் போராட இயேசுவை வேண்டிக்கொண்டே வழியில் புலியூர்குறிச்சியில் பாறையில் தன் கைமுட்டால் இடிக்க, தண்ணீர் ஊற்றெடுத்து அவர் தாகம் தீர்தது. அது இன்றும் வற்றாமல் ஊற்றெடுத்து வரலாறாக திகழ்கின்றது



      துன்பப் பயணத்தின் 1752 ஜனவரி  14-ல் ஆரல்வாய்மொழி மலையில் சுட்டு கொலைசெய்யப்பட்டார். காட்டு விலங்குகளுக்கு வீசப்பட்ட அவரது உடலின் பகுதிகள் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோட்டாறு மறைமாவட்டம் அவருக்கு மறைசாட்சிப் பட்டம் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
     திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்களால் தேவசகாயம்பிள்ளை முக்திபேறுபெற்ற மறைசாட்சி என ஒப்புதல் வழங்கப்பட்டு வரும் 02-12-2012 அன்று நடைபெறும் மாபெரும் விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் அமாத்தோ அவர்களால் அறிக்கையிடப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பொதுநிலையினர் மறைசாட்சி எனப் போற்றப்பெறும் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையை மகிமைப்படுத்தும் இவ்விழாவில் பங்கேற்று மறைசாட்சியின் வழி இறையாசீர் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.

                                                                                                                        இப்படிக்கு
                                                                               முள்ளங்கினாவிளை  இறைமக்கள்..

நன்றி தகவல்கள்:
                விழா ஒருங்கிணைப்பு குழு,கோட்டாறு மறைமாவட்டம்.

அனைவரும் வருக!                                                            இறையாசீர் பெறுக!

Saturday, June 16, 2012

இதய கதவு- எங்கள் பங்கு இளையோரின் படைப்பு

எங்கள் பங்கு இளையோரின் முதல் வெற்றி பயணம்...

இதய கதவு எங்கள் நினைவில் வாழும் மண்ணின் மைந்தர்
அருட்பணி.வ.ஆசீர்வாதம் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது

அந்த கதையை நாங்கள் நாடக வடிவம் கொடுத்தோம்..

அதன் சில காட்சி பதிவுகள் உங்களுக்காக..............

























இப்படிக்கு

கலைத்தோழனாய்

அன்புடன்

ஜெரி...................................



நண்பர்களின் பிரிவு-கல்லூரி கடைசிநாள் நினைவுகள்......

பிரிவு
என்றும் சோகத்தை ஏற்படுத்தும் நிகழ்வு.........
என் கல்லூரியில் நண்பர்களின் பிரிவும் அதன் சில பதிவுகள்........

தேதி: 8-6-2012...
அன்று மாலை நேரம் ..... ஒரு 3 மணி இருக்கும்...
எல்லோரும் கல்லூரி Enterence ல் அமர்ந்திருந்தோம்...
அப்போது சிலர் பழைய நினைவுகளை பற்றி பேசி கொண்டிருந்தனர்...


திடீரென இலக்கியா(Elakiya) அழ தொடங்கினாள்... அதன் பறகு சொல்லவா வேண்டும் வரிசையாக ஜெயா,சங்கரி,சரண்யா பிரிவை நினைத்து அழுதனர்.
கடைசியாக அழவே மாட்டேன் என்ற பிருந்தாவும் அழுது விட்டாள்...

"எங்கள் நண்பர்களின் பிரிவை கண்ட
இயற்கையும் கண்ணீர் விட்டது"

ஏனென்றால் உண்மை நண்பர்களின் பிரிவு இயற்கைக்கு தெரியும்......

இதன் வீடியோ காட்சி பதிவுகள் என்னால் பதிவு செய்ய பட்டது....
இதை என் நண்பர்களின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்....

பார்த்து உங்கள் கருத்துகளை command ல் பதிவு செய்யுங்கள்....



இப்படிக்கு

என்றும்
நண்பர்களின்
நினைவுகளுடன்
உங்கள்

ஜெரி



Friday, June 15, 2012

College Final Day Sweet Memories


எனது கல்லூரி பயணத்தின் கடைசி நாள் நினைவுகள்...............


பிரிவினை கவிதையாக்கும் நண்பர்கள்.....................




















         

Final Day College With in my Friends


Hi Friends I Dedicate in This page Sapthagiri College  2012 Passout friends ....

       Let See the memorable memories .....














Thursday, June 14, 2012

College Final Day ECE Friends

Hi Friends I Dedicate in This page Sapthagiri College  2012 Passout friends ....

       Let See the memorable memories .....