இத்தாலி நாட்டில் டுரின் என்ற இடத்தில் புனித டான் போஸ்கோ (தொன் போஸ்கோ) 16.8.1815-ம் ஆண்டு பிறந்தார். குழந்தையாக இருக்கும் போது தந்தையை இழந்தார். தந்தையை இளம் வயதிலேயே இழந்த சோகம் அவரது மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.
வளர்ந்து பெரியவன் ஆனதும் அனாதைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும்பிய அவர், பாதிரியார் ஆனார். சலேசியன் சபையை ஆரம்பித்து ஏராளமான பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் உருவாக்கினார்.
கல்வி பணிக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் தொடங்கினார். சலேசிய சபை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவியது. டான் போஸ்கோ 31.1.1888 அன்று தனது 72 -வது வயதில் காலமானார். அவர் மறைந்த பிறகு அவரது பெயரால் ஏராளமான அதிசயங்கள் நிகழ்ந்தன. அவரை அடக்கம் செய்த இடத்தை தோண்டி பார்த்தபோது அவரது வலது கை மட்டும் அழியாமல் சிதையாமல் அப்படியே இருந்தது.
இந்த நிலையில், 1934-ம் ஆண்டு டான் போஸ்கோவுக்கு அப்போதைய போப் ஆண்டவர் 11-வது பயஸ் புனிதர் பட்டம் வழங்கினார். புனித டான்போஸ்கோவின் சிதையாத வலது கையுடன் அவரது முழுஉருவ மெழுகு சிலை இத்தாலியில் பேணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புனித டான் போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையின் 150-வது ஆண்டையொட்டி அவரது அழியாத வலது கையுடன் கூடிய முழுஉருவ மெழுகு சிலையை சலேசிய சபை அமைந்துள்ள இடங்களுக்கு ஒரு புனித பயணமாக கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 31.1.2009 அன்று இந்த புனித பயணம் தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்த திருப்பயணம் கடந்த மே மாதம் இந்தியாவை வந்தடைந்தது.
Some photos of Don Bosco Relic in India.
சாந்தோம் தமிழ்நாடு |
In Thiruvananthapuram |
In Madurai |
In Tanjore |
Don Bosco's Relic in Dharmapuri(Tamilnadu).
So Friends All Of Them Pray to GOD..
So Prayer Is the
" "Prayer is like a weapon that we need always to have ready to defend ourselves in the moment of danger." -"DonBosco"...........
Thanks Jenil. This video gives the relic tour in Washington DC last year.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=biVm9C7MxsU
http://www.youtube.com/watch?v=FuxTerY3kbM